திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆலங்குடி செழியன், ரமேஷ், பொன் பாண்டி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக நார்த்தங்குடி பாலசுப்பிரமணியன், ஆலங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், திருவோணமங்கலம் தட்சிணாமூர்த்தி, அரவத்தூர் வி. மணி ஆகியோர் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார்கள். நார்த்தாங்குடி பாலசுப்பிரமணியன் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து அனைவரும் நார்த்தாங்குடி நடுநிலைப்பள்ளி மற்றும் அரவத்தூர் கிளியூர் ஆரம்பப்பள்ளி இரண்டு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு நார்த்தங்குடி பாலசுப்பிரமணியன், அரவத்தூர் வி. மணி ஆகியோர் நோட்டு புத்தகங்கள் மற்றும் பேனா வழங்கிய சிறப்பித்தார்கள்.