செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் அருள்மிகு சுந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த வைபவத்தில் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தலைமை அர்ச்சகர் ராஜன் சுவாமிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.