தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் விதமாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஹைடெக் அன்பழகன் தலைமையில், தலைமையாசிரியர் இருதயராஜ் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள், கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்.உடன் பள்ளி சக ஆசிரியை ஆசிரியர்கள், தண்டபாணி,ஆனந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.