கம்பம் உத்தமபாளையம் தேனி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் மொஹரம் பண்டிகை கொண்டாட்டம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கம்பம் தேனி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்கள் மொஹரம் பண்டிகை திருநாளை ஒட்டி தர்காக்களில் கொடியேற்றி மொஹரம் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது
உத்தம்பாளையம் முகாம் பத்து நோன்பு தைக்கா ரசூல் சாஹிப் தர்கா ஆகிய பள்ளிவாசல்களில் கொடி ஏற்றப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது உத்தம்பாளையம் கோட்டைமேட்டு தெருவில் அமைந்துள்ள நான்கு நூற்றாண்டு பழமையான ரசூல் சாகிப் தர்கா அமைந்துள்ளது இந்த தர்காவில் ஒவ்வொரு வருடமும் முகாம் பத்தாம் நாளில் கொடியேற்றி வைத்து ஷரீப் ஓதுவது வழக்கம் நேற்று நடைபெற்ற மொஹரம் பண்டிகை திருநாளை முன்னிட்டு முகாம் பத்தாம் நாளில் ரசூல் சாஹிப் தர்காவில் மௌ லீது ஷரீப் ஓதப்பட்டது இந்த நிகழ்ச்சியில் இமாம்கள் இஸ்மாயில் ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டு ம மௌலிது ஓதப்பட்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் ரசூல் சாஹிப் தர்கா பரம்பரை முத்தவல்லி மைதீன்ஷா சையது அப்தாஹிர் ஆகியோர் தலைமையில் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது மொஹரம் பண்டிகை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு உலக மக்கள் நலன் வேண்டியும் இந்தியாவில் மத நல்லிணக்கம் வளரவும் நம் நாட்டின் விவசாயம் பெருக மலை வளம் செழிக்கவும் அமைதி மலரவும் பிரார்த்திக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர் இதேபோல் கம்பம் கல்வத்து நாயகம் தைக்கா புதுப்பள்ளிவாசல் வா வேர் பள்ளிவாசல் மைதீன் பள்ளிவாசல் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும்மொஹரம் பண்டிகை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது