ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரை சுற்றியுள்ள பிச்சம்பட்டி கன்னியப்பிள்ளை பட்டி ஏத்த கோவில் கண்டமனூர் கோவிந்த நகரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மல்லிகை பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
சாகுபடி செய்யப்பட்ட மல்லிகை பூவை ஆண்டிபட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் விவசாயிகள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று ஆடி மாத முதல் நாள் என்பதால் நேற்று முன்தினம் வரை ரூபாய் 500க்கு விற்ற மல்லிகைப்பூ ரூபாய் 1500 க்கு விற்பனை செய்யப்பட்டு ஜெட் வேகத்தில் விலை உயர்ந்துள்ளது
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர் இதுகுறித்து இல்ல தரதிகளிடம் கேட்டபோது பூ மார்க்கெட்டில் வரத்து அதிகமாக இருந்தாலும் மக்களுக்கு தேவைப்படும் விசேஷ நாட்கள் சுப காரியங்கள் ஆகிய நாட்களில் மல்லிகை பூவை பதுக்கி வைத்து மல்லிகைப்பூ வரத்து கம்மியாக இருப்பதாக காண்பித்து விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நியாயமான விலையில் மல்லிகைப்பூ கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்