மதுரையில் தென் மண்டல காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப் பேற்றுக் கொண்டார்.
தென் மண்டல காவல் துறைத் தலை வராக இருந்த கண் ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தென்மண்டல காவல் துறை அலுவலகத்தில் பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தென் மண்டலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியத் துவம் அளிக்கப்படும். போதைப் பொருள்கள் விற்பனை, கடத் தல்கள் முற்றிலும் தடுக்கப்படும். போதைப் பொருட்கள் குற்றத்தில் ஈடுபடு வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளை கண்காணிக்க தனி செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப் படும்.
காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக் குத் தேவையான உத விகள் செய்து கொடுக்கப்படும். விபத்துக் களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவை யான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
கூடுதல் காவல் நிலையங் கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினார் .
இவருக்கு, மதுரை சரக காவல் துணைத் தலைவர் ரம்யா பாரதி, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தென் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பிரேம் ஆனந்த் சின்ஹா ஏற்கெனவே மதுரை மாநகரக் காவல் ஆணையராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.