பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே முருக்கன்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சேத்து மாரியம்மன் ஆலய
திருவிழா கடந்த 12.7.24 ந்தேதி கொடியேற்றம் (காப்பு கட்டுதல்) தொடங்கியது
அதனைத் தொடர்ந்து ஶ்ரீ சேக்குமாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை சாமி ஊர்வலம், கரகாட்டம் வான வேடிக்கையுடன் கடந்த ஒரு வாரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கியநிகழ்வுகளில் ஒன்றான பால்குடம் எடுத்தல் நிகழ்வு 19.7. 24 இன்று நடைபெற்றது
இதில் அக்கினிச்சட்டி மற்றும் அலகு குத்துதல் என பக்தர்கள் சுமார் 70க்கும் மேற்பட்டோர் திரளான பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து ஊர்வலமாகமுக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலிக்கு வந்தனர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.இதனால் பகுதியில் கோலாகலமாக காணப்பட்டது
இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்துள்ளனர்