கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சியில் சென்னை. அன்பே சிவம் மற்றும் சிகரம் அறக்கட்டளை நிறுவனர்கள் கபிலன் தனலட்சுமி ஆகியோர்கள் கலந்துகொண்டு தலைமை தாங்கினார் பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புவனகிரி மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் வசித்து வரும் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் கோரிக்கையை மனுவாக பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் 40-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அவர்களுக்கான அயனிங் தொழிற் கடை மற்றும் சிறு தொழில் தொடங்குவதற்கான பெட்டிக்கடை அமைத்து தருவதாக உறுதி அளித்தார் மேலும் வடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கை குழந்தையுடன் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வரும் கங்காதேவி என்கின்ற நலிவடைந்த மாற்றுத்திறனாளிக்கு சுயத்தொழில் தொடங்குவதற்கான இரண்டு மாத காலங்களாக இலவச தையல் பயிற்சி கொடுக்கப்பட்டு தையல் இயந்திரத்தை சென்னை. அன்பே சிவம் அறக்கட்டளை மற்றும் சிகரம் அறக்கட்டளை நிறுவனர்கள் நேரில் வந்து வழங்கினார்கள் நிகழ்ச்சியின் இறுதியாக கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி நன்றி உரை ஆற்றினார் மேலும் இந்த நிகழ்ச்சி அந்ததபகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *