பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தையல் கூட்டுறவு சங்கம் அரியலூர் மாவட்டத்திற்கு பிரிந்து செல்வதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை தைத்து தரும் பணியை மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தைத்து வருகின்றனர் .
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்திற்கு என்று தனியாக மகளிர் தையில் கூட்டுறவு சங்கம் அமைக்க கடந்த பத்தாம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தையல் கூட்டுறவு சங்கம் பிரிப்பதை கண்டித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இருந்தபோதிலும் கடந்த 10.7.2024 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சை அவர்களை சந்தித்து மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் அரியலூர் மாவட்டத்திற்கு என்று சங்கம் பிரிந்து சென்றால் இங்கு கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளனர்
இதனால் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாவும் தையல் தைக்கும் துணியின் எண்ணிக்கை குறைவாகவும் ஏற்படும் ஆகவே பிரிந்து சென்றாலும் அரியலூர் மாவட்டத்திற்கு தையல் துணியை பெரம்பலூர் மாவட்ட உறுப்பினர்கள் தைத்து தருவதற்கு அனுமதியாவது தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் விசாரித்து முடிவு எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார். திடீரென நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது …