வாணியம்பாடி அருகே சென்னையில் இருந்து ஓசூர்க்கு இரசாயன எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதனிடையே 35000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி கவிழ்ந்ததால் சோப்பு தயாரிப்புக்கு எடுத்து சென்ற இரசாயன எண்ணெய் சாலையில் கொட்டி வீணானது இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயம் அடைந்தார் இந்த விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.