பெரியார் நினைவு சமத்துவபரத்தில் உள்ள சிறுவர் பூங்காவினை மறு சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சுக்கமநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சிறுவர் பூங்காவில் அதிக அளவில் விளையாடுகின்றனர். இப்பூங்காவில் முட்புதர்கள் போல கலைகள் காட்சியளிப்பதுடன்,மழை வெயில் காலங்களில் சிறுவர்கள் விளையாடும் போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சிறுவர்கள் விளையாடும் போது பாதிப்பு ஏறபட வாய்ப்பு உள்ளது.
மேலும் இப்பூங்காவில் ஊஞ்சல் பழுதாகி பல மாதங்கள் ஆகியும் கண்டு கொள்ளாமல் நிர்வாகம் இருக்கிறது.இதன பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மறு சீரமைப்பு செய்து கலைகளை நீக்கம் செய்வதுடன் பூங்காவில் உள்ள ஊஞ்சல் போன்ற வற்றை சரிசெய்து தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.