திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள50 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் விதமாக ஐந்து கட்டங்களாக மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆலங்குடி ஊராட்சியில் நடைபெற்றது, அதனை அடுத்து அரித்வாரமங்கலம் ஊராட்சியில் சமுதாயக் கூடத்தில் அரித்துவாரமங்கலம், மருவத்தூர், பெருங்குடி, புளியக்குடி, தென்குவளவேலி, அவளிவ நல்லூர், 83. ரெகுநாதபுரம், 85. கிளியூர், முனியூர், மணக்கால், களத்தூர், விளத்தூர், வீராணம், வடக்கு பட்டம் மற்றும் தெற்கு பட்டம் உள்ளிட்ட 15 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள்தான் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முகாம்களில் மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை இன நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிடும் பொருட்டு இத்திட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், பட்டா கோருதல், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கோருதல் மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வரப்பட்டன. குறிப்பாக கலைஞர் பெண்கள் உரிமை தொகை மற்றும் கலைஞர் கனவு இல்லம் தொடர்பான மனுக்கள் அதிகளவில் வரப்பெற்றன. கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு செய்வதில் விதிமுறைகளை தளர்வு செய்து, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க உரிய வழிவகை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களிடம் இருந்து மனுக்கள் வரப்பட்டன. மேற்படி முகாம்களில் பெறப்படும் மனுக்களை 30 நாட்களுக்குள் முடிவு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி .ஊ )செந்தில், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் தாமரைச்செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்