தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் சிந்தனை சிற்பி ம. சிங்காரவேலர் நினைவரங்கத்தில் சங்கத்தின் மாநில துணை தலைவர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது

எதிர்கால வேலை திட்டம் குறித்து மாநில பொதுச்செயலாளர் அ.பாஸ்கர்பேசினார்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் (NDA 3) இன் முதல் ஆண்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த யூனியன் பட்ஜெட்

நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது. விவசாயத் தொழிலாளியை இந்த அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது

கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பாஜக அரசு தொடர் தாக்குதலை கொடுத்து வருகிறது.

இந்த பட்ஜெட் முற்றிலும் ஏழை எளிய சாமானியர்களுக்கு எதிரானது முற்றிலும் கார்ப்பரேட் நலன்களுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை சிறமபடுத்துகிறது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொய் பேசுகிறார் நிர்மலா சீதாராமன் பொது விநியோக முறையை வ லுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை முந்தைய ஆண்டில், உணவுப் பாதுகாப்புக்காக 2.12 லட்சம் கோடியாக இருந்த ஒதுக்கீடு, இந்த ஆண்டு 2.05 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது

MNREGA திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்த ரூ.86,000 கோடியிலிருந்து ஒன்றிய அரசு அதிகரிக்கவில்லை, அதே சமயம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 90,000 கோடியாக இருந்தது குறைந்தபட்சம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்

இது கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு திட்டத்தை தீர்க்க உதவாது இதன் காரணமாக வேலை தேடி இடம் பெயர்தல் அதிகரிக்கும் நிலை தொடரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்ஜெட்டின் மொத்த நிதி அளவு 44 லட்சம் கோடியிலிருந்து 48 லட்சம் கோடியாக 10% அதிகரித்திருக்கும் போது அனைத்து நல திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு செய்திருக்க வேண்டும்

பி எம் ஏ ஓய் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது கடந்த நிதியாண்டில், 55,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 32,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தலா 5 லட்சம் வீதம் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று இன்றைய விலைவாசி உயர்வாலும் மணல் பற்றாக்குறையாலும் 2022 முதல் 2024 வரை வழங்கப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கா நிலை தொடர்கிறது.இதை கட்டி முடிப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கிடு செய்திட வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நூறு நாள் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் ஊராச்சிகளிலும் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தியுள்ளோம்

எனவே அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் ஒன்றிய அரசு நகர்புறங்களில் செயல்படுத்தி வரும் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து நகராட்சி பேரூராட்சிகளில் செயல்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருப்பு செயலாளர் எஸ். கேசவராஜ் சங்க மாவட்ட செயலாளர் கு.ராஜா தலைவர் மகேந்திரன் நாகை மாவட்ட செயலாளர் பாஸ்கர் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கணபதி தஞ்சை மாவட்ட செயலாளர் சுந்தரராஜ் உள்ளிட்ட நான்கு மாவட்ட இடைநிலைக் குழு மாவட்ட தலைவர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலை வழங்கிட வேண்டி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *