பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 1வது வார்டு பகுதியில் தனிநபர் பொது பாதையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் நபர் மீது பலமுறை மனுக்கள் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தீரன் நகர் குடியிருப்பு நல சங்கம் தலைவர் ராமநாதன் தலைமையில் அந்தப் பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஜெயங்கொண்டம் தீரன் நகரில் உள்ள பொதுப் பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதையும்
தீரன் நகர் முதல் செல்வபுரம் வரை அனைத்து வீதிகளிலும் மழை நீர் வடிகால் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாக அமைத்துத்தர வேண்டியும் அரசு கலைக்கல்லூரி எதிர்புறம் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் பொது வெளியில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் நகராட்சியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் இளங்கோவன் ரவிச்சந்திரன் கணேஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.