திருவாரூர் வ. சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை (கப்பல் படை பிரிவு) சார்பில்
கார்கில் போரில் கலந்து கொண்ட மாவீரர்களின் வீரத்தை போற்றும் வகையிலும், உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் நினைவூட்டும் வகையில் ஓவியம் வரைதல் மற்றும் போஸ்டர் தயாரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்வில் பள்ளியின் தாளாளர் முனைவர் எம்.வி. பாலசுப்பிரமணியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டீ. தியாகராஜன் உதவித் தலைமை ஆசிரியர் எஸ். முருகேசன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ஓவியம் வரைதல் மற்றும் போஸ்டர் தயாரித்தல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளியின் மாணவர்கள்
ஒன்பதாம் வகுப்பு ஏ பிரிவு டி.ராம்குமார் முதல் இடத்தையும் இரண்டாம் இடத்தை ஒன்பதாம் வகுப்பு ஏ பிரிவு எஸ்.அபிஷேக் மற்றும் என். ராஜா ஒன்பதாம் வகுப்பு டி பிரிவு முகமது மூன்றாமிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது
நிகழ்விற்கான பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும் என்.சி. சி முதன்மை அதிகாரியுமான ஆர்.சதீஷ்குமார் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார்