திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ வழிகாட்டுதலின்படி 04-வது பட்டாலியன் (என் டி ஆர் எப்) தேசிய பேரிடர் மீட்பு படையினர் டீம் கமாண்டர் சதீஷ்குமார் தலைமையில் 14 நாட்கள் முகாம்மிட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு சட்டம் விதிப்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழிகாட்டுதலின்படி இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளை ஆராய்ந்து மற்றும் வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி, நிலச்சரிவு, ரசாயன கசிவு (விஷ வாயு தாக்குதல்) போன்ற பேரிடர் குறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்கள் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும், செய்முறை பயிற்சியும் செய்து காட்டி வருகிறார்கள். நிகழ்ச்சியில் பேரிடர் கால தாசில்தார் பரஞ்சோதி, வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம், துணை வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர் விக்னேஷ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.