பெரம்பலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின்86 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி இணைப்பு வழங்கி மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் ஒன்றியத்தில் பழைய பேருந்து நிலையம் எளம்பலூர் , வேப்பூர் ஒன்றியத்தில் அகரம்சீகூர் , வேப்பந்தட்டை ஒன்றியத்தில் பசும்பலூர், ஆகிய இடங்களில்வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆலோசனைப்படி ,பொதுக்குழு உறுப்பினர் அணுகூர் ராஜேந்திரன் தலைமையில் செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான்.மாவட்ட இளைஞர் அணி தலைவர் செல்வகுமார் ஒன்றிய செயலாளர்கள்,சீனிவாசன்,சிவசங்கர் நகர செயலாளர் இமயவர்மன் ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி சிலை அருகில் உள்ள வியாபாரிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது… அதனை தொடர்ந்து பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி குறிப்பேடுகள் எழுதுகோல்கள் வழங்கப்பட்டது .இதேபோல் வேப்பூர் ஒன்றியத்தில் அகரம் சீகூர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் . ஒன்றிய செயலாளர் சிவசூரியன், ஒன்றிய பொருளாளர் அம்சவள்ளி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு மா 86, பலா 86, தென்னை 86 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
.இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் பசும்பலூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர் சத்யராஜ் ஒன்றிய துணை தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கி மா கொய்யா நெல்லி உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.பல்வேறு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாமக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
