12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு தொடர்ந்து கோரிக்கை :
பள்ளிக்கல்வி செயலாளரிடம் வலியுறுத்தல் :
முதல்வரின் முகவரிக்கும் கோரிக்கை:
பள்ளிக்கல்வித்துறை அரசாணை 175ன்படி 6500 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்ததை போல,
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்:
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை மனுவில் கூறியுள்ளது :
சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை யில் அரசாணை 175 மூலமாக நடுநிலைப் பள்ளிகளில் தற்காலிக பணியிடங்களில் இதுவரை பணிபுரிந்த 1581 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3565 பட்டதாரி ஆசிரியர்களை, கடந்த 16 ந்தேதி அன்று நிரந்தரப் பணியிடங்களாக்கி ஆணையிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்விச் சட்டம் 2009 ன் படி, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் நிதியாண்டில் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட தற்காலிக பணியிடங்களில் இந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இவர்களைப் போலவே அரசுப் பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் தற்போது 12 ஆயிரம் பேர் ரூபாய் 12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
175 அரசாணையின் மூலமாக 6500 ஆசிரியர்களின் தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தியதை போலவே, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தி பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களிடம் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தண்டபாணி சுரேஷ் நாகலட்சுமி முரளி ஆனந்தன் உள்ளிட்டோர் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
இது குறித்து மேலும் செந்தில்குமார் கூறியது :
தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையாக தொடர்ந்து எழுந்து வருகிறது.
இதை தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203