தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளில் வீடு பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தகவல்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய 200 மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வீடு வழங்கிட தகுதியான நபர்களை தேர்வு செய்ய

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பம் சொந்த வீடு, நிலம், காலியிடம் இருக்ககூடாது, வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், விண்ணப்பித்தவர்களில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்தளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இராஜபாளையம் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்கள், கண்டிப்பாக புது இருப்பிடத்திற்கு குடிபெயர வேண்டும். குடியிருப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.89,000 பணம் செலுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும், விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் கிடைக்கப்பெற கடைசி நாள்: 31.07.2024. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2, வருமான சான்றிதழ்) மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068 -யை தொடர்புக்கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *