தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணையின்படி
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம் பி மற்றும்தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் நா. ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில்
தேனி நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
னி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார்
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன்
தேனி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்லபாண்டியன் தேனி நகர செயலாளர் நாராயண பாண்டியன் போடி நகர செயலாளர் புருஷோத்தமன் தலைமை செயற்குழு உறுப்பினரும் போடி நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான சங்கர் பூ திப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் உள்பட
மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற தலைவர்கள் , பிரதிநிதிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டை கேலிக்கூத்தாக்கும் வகையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளதாகவும், நாட்டில் வரி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள நிலையில் வெள்ள நிவாரணம், புயல் பாதிப்பு போன்ற இயற்கை பேரிடர்களுக்கு ஒன்றிய அரசு நிவாரண வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது