மதுரையிலிருந்து நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கடந்த 39 ஆண்டுகளாக மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாக ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் தலைமையில் சென்று வருகிறார்கள்.
முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3 வது வாரம் ஜெபமாலை அணிந்து ஜெப, தவ முயற்சிகளில் ஈடுபட்டு ஜூலை மாதம் கடைசி சனிக்கிழமை மாலை மதுரையிலிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெள்ளியன்று வேளாங்கண்ணி ஆர்ச் சென்றடைகின்றனர்
அங்கு பாதயாத்திரையாக சென்றவர்களின் குடும்பத்தினர்கள் அவர்களை வரவேற்று பவனியாக ஆலயத்தை அடைகின்றனர்.
மாலை அணிந்த நாட்கள் முதல் பாதயாத்திரை துவங்கும் வரை ஒவ்வொருவர் இல்லங்களிலும் ஜெபமாலை வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
இந்த ஜெப வழிபாட்டில் நாட்டின் நலனுக்காகவும் மற்றும் குழந்தைகளின் படிப்புக்காகவும், படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் காகவும், திருமண மாகாத இளைஞர், இளம் பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், முதியோர்களுக்கு நல்ல உடல் நலம் வேண்டியும், மரித்தவர்கள் ஆன்மா இறைவன் பாதம் சாந்தியடைய வேண்டியும் மன்றாடுகிறார்கள். சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள்.
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.