சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக் கிராமத்தில் 1-கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்..
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை பாராளுமன்றஉறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் அரவிந்த் ரெஜிஸ், இளையான்குடி ஒன்றிய சேர்மன் முனியாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கம். மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்திராணி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சாத்தையா,காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் அல் அமீன், செல்லபாண்டியன், மீசை விஜயகுமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆறு.செல்வராஜன், தமிழ்மாறன், செய்யது கான், உதயகுமார், முருகானந்தம், காளிமுத்து, கருணாகரன், அய்யாசாமி மற்றும் மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்