ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் சார்பாக நடைபெற்ற விழாவில்,மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..
ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிமுக விழா,கே.என். பாளையம் பகுதியில் உள்ள நாகினி வித்யாலாயா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,செயலாளர் கார்த்திகேயன் முன்னால் செயலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னி்லை வகித்தனர்..
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னால் மாவட்ட ஆளுநர் ஏ.வி.பதி கலந்து கொண்டார்.
இதில் கவுரவ அழைப்பாளராக துணை ஆளுநர் ராஜன் ஆறுமுகம்,சி.ஜி.ஆர்.திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் முன்னதாக ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் தலைவர் சரவணன், ரோட்டரி சங்கத்தின் மூலமாக சமுதாயத்திற்கு பலவித சேவைகள் செய்து வருவதாகவும்,இதில் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் செய்த முக்கிய சேவைகள் குறித்து பேசினார்
தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் சைக்கிள்,சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை,வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..