புழல் காந்தி பிரதான சாலை
பாலாஜி நகர் பகுதியில் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு பிரிவிலும் அலுவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் வேலைகள் மந்தமாக காணப்படுகிறது.

குறிப்பாக நில அளவை பிரிவில் இருக்கும் பெண் ஊழியரான சர்வேயர் தனது அலுவலகத்திற்கு வாரம் ஒருமுறை திங்கள் கிழமை அன்று வருவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பஸ் வசதிகள் இல்லாத போதும் நடைபயணமாக 3 கி மீட்டர் தூரம் நடந்து அலுவரை பார்க்கவரும் போதெல்லாம் கூட்டம் அதிகமாக உள்ளதாலும் இருப்பிடவசதிகள் செய்து தராமலும் அலைகழிப்பு செய்து வருகின்றபடியால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

எனவே அலுவலக பணிகளை விரைந்து முடிக்க அனைவரின் கோரிக்கையாக உள்ளது.மேலும் இங்கு அதிகாரிகள் புரோக்கர்களுக்கு முதலிடம் தரப்படுவதாக பரவாலாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *