விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி 100 வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட மருத்துவர் அணியும் இராதா மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் மருத்துவ முகாமினை சிறப்புவிருந்தினர் சீர் மரபினர் நல வாரிய துணை தலைவர் மற்றும் திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராசா அருள்மொழி தலைமையில் முகாமனை துவக்கி வைத்தனர்.
பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆதிதிராவிடர் நலத்துறை வாரியத்தலைவர் வி.பி.ராஜன் கலந்து கொண்டு கல்லீரல் காப்போம்” என்ற புத்தகம் வெளியிட்டார்.
பொது மருத்துவம், இரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரையின் அளவு மஞ்சள் காமாலை B மற்றும் சி நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
மேலும் இம்முகாமில் சிறப்பு சோதனைகளாக பைப்ரோ ஸ்கேன் மூலம் கல்லீரலின் செயல்பாடு மற்றும் பாதிப்புகள் அதற்குரிய சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன
மேலும் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் உடல் நிலை மாற்றம் மற்றும் பாதிப்பு குறித்து நோயாளிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இம் முகாம் மூலம் பல்வேறு வித நோய்களுக்கான பரிசோதனைகள் சிகிச்சைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இம் முகாம் மூலம் பயனடைந்தனர்.