பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பொட்டக்கொல்லை தத்தனூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது
இந்த திருவிழாவானது வருடம் தோறும் மண்டகப்படிகாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி நடத்தும் 16 நாட்கள் ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவானது முதல் நாள் உள்ளூர் ஏரிக்கரையில் இருந்து கரகம் பூவினால் பிரம்மாண்டமாக ஜோடித்து பூங்கரகமாக மேல தாளங்களுடன் மற்றும் வானவேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அம்மன் கோவிலை சென்று அடைந்தது விழாவின் தொடர்ச்சியாக 10 விழா நேற்று கொண்டாடப்பட்டது
இதில் அம்மனின் கோவிலில் கரகம் ஜோடிக்கப்பட்டு அந்த பூங்கரகத்தை அம்மனின் தலையில் வைத்து பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் பூங்கரகத்தினை வீதி உலா காட்சிக்காக எடுத்துச் சென்றனர் இந்த கரகமானது ஒவ்வொரு வீட்டிலும் பூஜை செய்து மகா மாரியம்மன் கோவிலில் சென்றடைந்தது இதில் மண்டகப் படிகாரர்கள் ஊர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்
இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஜெயங்கொண்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் காவல்துறை ஆய்வாளர் பாபு ஆகியோர் வழிநடத்தலின் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு அளித்து இருந்தனர்.
தமிழ்நாட்டில் எங்கும் பின்பற்றாத புது விதமான கரகத்தினை ஜோடித்து அம்மன் தலையில் வைத்து பூஜித்து வீதி உலா செல்வது வினோத நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.