கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அம்மனுக்கு ஆடி மாத செடல உற்சவம், பால்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் .
அம்மனுக்கு உகந்த மாதமாக இருக்கக்கூடிய ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் முன்னிட்டு, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட பூதாம்பூரில் எழுந்தருளியுள்ள செங்கழனி மாரியம்மன், கஸ்பா பகுதியில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன், பெரியார் நகரில் எழுந்தருளி உள்ள தேவி கருமாரியம்மன் ஆகிய கோவில்களில், பக்தர்கள் அம்மன் வேடமணிந்து, 15 அடி அலகுகள் குத்தியும், பெண்கள் பால்குடம் எடுக்கும், தீச்சட்டி எடுத்தும் வழிபட்டனர்.
முன்னதாக மணிமுத்தா நதிக்கரையிலிருந்து, புறப்பட்டு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக, மேளதாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.