ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நார்த்தங்குடியில் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் நான்கு லட்சம் மதிப்பில் 30 அடி உயர மின் கோபுர விளக்குகள். .
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட நார்த்தாங்குடி (தஞ்சாவூர் திருவாரூர் கும்பகோணம் மன்னார்குடி) புறவழி சாலை ரவுண்டா னா பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்து களை தடுக்கும் நோக்கில் இரண்டு உயர் கோபுர மின் விளக்குகளை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் சுமார் 4 லட்சம் மதிப்பில் 30 அடி உயர் மின் கோபுர விளக்குகளை காரைக்கால் காவேரி அசட் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அமைத்துள்ளது
உயர் கோபுரவிளக்கு
மற்றும் போக்குவரத்து உபகரணங்களை திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர்
எஸ் ஜெயக்குமார் இயக்கி வைத்து மக்கள்
பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பேசும் போது விபத்து
மற்றும் உயிர்சேதங்களை தடுக்கும் பொருட்டு நாம் கேட்டவுடன்
ஒரேவாரத்தில் ஓ.என்.ஜி. சி செய்துள்ளது என பாராட்டு தெரிவித்தார்
ஊராட்சி மன்றதலைவர் உடன் மின்இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தமைக்கும் பாராட்டுதெரிவித்தார்
ஓ.என்.ஜி.சி குழுமபொது மேலாளர் மாறன்
பேசும் போது ஓ.என்.ஜி.சி நிறைய மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறது அந்த வகையில் இதனை செய்திருக்கிறோம்
இந்த வாய்பை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளருக்கும்
பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார் நீங்கள் உரிமையுடன்கேட்கும் நலத்திட்டங்கள் எங்கள் எல்லைக்குள்
இருக்கும் பட்சத்தில் செய்ய கடமை பட்டுள்ளதாக தெரிவித்தார்
நிகழ்ச்சியில் பொதுமேலாளர் சரவணா ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமேரி சித்திரவேல்
சமூக ஆர்வலர்கள் காவல் அதிகாரிகள்
ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் அரசியல்
கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர் மின் கோபுர
விளக்கு அமைத்து தந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனைவரும் நன்றி தெரிவித்து பேசினர்
விழா ஏற்பாடுகளை சித்திரவேல் செய்திருந்தார்
விளக்குகளை ஓ.என்.ஜி.சி நிதியில் நாகையை சேர்ந்த யோகிதா தொண்டு நிறுவனம் செய்திருந்தது