பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் கார்கில் போர் விஜய் நிவாஸ் வெள்ளி விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் தன்னாட்சி மகளிர் கல்லூரியில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கார்கில் போர் நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் போரை நினைவு கூறும் விதமாகவும் இந்த போரில் இந்திய திருநாட்டுக்காக உயிரைக் கொடுத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் கார்கில் விஜய் நிவாஸ் வெள்ளி விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு தேசிய மாணவர் படையின் கேப்டன் பேராசிரியை முனைவர் மெர்வின் டயானா அனைவரையும் வரவேற்று பேசினார் கல்லூரியில் முதல்வர் அருட் சகோதரி சேசுராணி தலைமை வகித்தார் கல்லூரி செயலர் அருட் சகோதரி முனைவர் சாந்தா மேரி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு ஆக பங்கேற்ற தமிழ்நாடு 2 மகளிர் பட்டாலியன் மதுரை துணை மேஜர் வி.பி யாதவ் கலந்து கொண்டு கார்கில் போர் பற்றி சிறப்புரை ஆற்றினார் கௌரவ பேச்சாளராக பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஹவில்தார் ராம்குமார் கார்கில் போரில் நாட்டுக்காக உயிரை கொடுத்த ராணுவ வீரர்கள் பற்றி பேசி கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு நினைவு உரையாற்றினார் இந்த விழாவில் ஹவில்தார்கள் ராஜ பிரபு சுரேந்திர சிங் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் தேசிய மாணவர் படை மாணவிகள் நம் இந்தியாவின் ஒற்றுமை ராணுவ வீரர்களின் தியாகங்களை பாடல்களின் மூலமாகவும் நாடகங்கள் நடத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விழாவில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி செயலாளர் சாந்தாமேரி நன்றி கூறினார்