பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே இரும்பு தலையில் உலக தாய்ப்பால் வாரம் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா இரும்புத்தலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி கிளப் மற்றும் தஞ்சாவூர் குந்தவை ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வாரம் நிகழ்ச்சியில், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியங்கள் குறித்து விவரிக்கப்பட்டது.
இதில் ஏராளமான தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் வருகை புரிந்திருந்தனர். தொடர்ந்து பாலூட்டும் தாய்மார்களுக்குதேவையான சத்துமாவு, பேரிச்சம்பழம், உலர்திராட்சை, டவல், ரஸ்க் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இரும்புத்தலை ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, களஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்ரீ வள்ளி விவேகானந்தன் உட்பட தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், தஞ்சாவூர் குந்தவை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.