கோவை சென்ஷிகான் மார்ஷியல் மாணவர்கள் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் !!

தலைநகர் டெல்லியில் ஜூலை மாதம் 27, 28-ல் 8 வது நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் கேம்ஸ் NMAG-2024 நடத்திய கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் தமிழ்நாடு கோவையில் சென்ஷிகான் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சோட்டகான் கராத்தே பயிற்சியாளர்கள் விஜயகுமார், ஜஸ்டின் ராஜ் , அமல்ராஜ், விஜயகுமார்,செல்லபாண்டியன், நடராஜ்,கதிரவன்,ஆகியோரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆதிஷ் பொதியன், அஸ்வின், கவியாழனி நவீன்,அபிநந்தன்,நிகாஷினி தேஜாஸ்ரீ ஆகியோர் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பத்தங்களை பெற்றனர்,

கோவையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நமது தேசம் முன்னேற்றத்திற்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் சமூக சேவை அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் சென்ஷிகான் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மாஸ்டர் சி விஜயகுமார் பயிற்சியில்
பாப்பநாயகன்பாளையம், பொன்ணி நகர் மைதானம், கற்பகம் காம்பளக்ஸ், சின்னயம்பாளைம், டி எல் எஸ் நகர், சங்கோதிபாளையம்,ஆகிய இபங்களில் வகுப்புகள் நடைபெறுகிறது , பல மாணவர்கள் பயிற்சி பெற்று மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முழு பங்களிப்பை அளித்து பல்வேறு பதக்கங்களை பெற்று வருகின்றனர் ,

மேலும், முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர் சந்தானம் அவர்களிடம் சென்ஷிகான் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மாஸ்டர் சி விஜயகுமார் 5 முறை விருது மற்றும் பாராட்டும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *