அரியலூர்,
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக தயாரிக்கப்பட்டு, கூண்டு (பாடி) கட்டப்பட்டு வரும் தாழ்தளப் பேருந்துகளை,தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,
ஆய்வு மேற்கொண்டு, அசோக் லேலண்ட் நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்து, பல்வேறு மேம்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கினார்.