மயிலாடுதுறையில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் சார்பில், நிதிநிலை அறிக்கையில் கட்டுமானத்துறையை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில், மாவட்ட துணை தலைவர்கள் மோகன், வினோத், மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் பொறியாளர் S. பாலாஜி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் தலைவர் பி. சுப்பிரமணியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து கலந்து கொண்டார். மாநில இணை செயலாளர் ஜெகமுருகன் கவன ஈர்ப்பு கண்டன உரை ஆற்றினார். மேலும் அகில இந்திய கட்டுனர் சங்க தலைவர் சிவராமன், மகளிர் அணி தலைவி பூங்கோதை, துணைத் தலைவர் ஆனந்த ஜோதி, டி கே டி எம் எஸ்,வடக்கு மாவட்ட தலைவர் அல்போன்சா, மாவட்ட செயலாளர் நாகராஜன், தெற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார்,தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் தனபால், cric. பொறுப்பாளர்கள் துணை செயலாளர் சிவபாலன்,இணை செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் திலகராஜ், பிஆர்ஓ வெங்கட்ராமன் மற்றும் பொறியாளர்கள், கட்டுனர்கள், ராஜமாணிக்கம், பழனி, பவானி அனைவரும் கலந்து கொண்டனர்.