நாமக்கல்லில் பரமத்தி சாலை கீரம்பூர் டோல்கேட் அடுத்து கோனூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் கள்ளுகட்டி கள்ளு இறக்கும் போராட்டம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றது குறிப்பாக தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய் விலை வெளி சந்தையில் அவ்வப்போது அதிக விலைக்கு வருகிறது தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த கோரியும் கள்ளுக்கடையை திறக்க கோரியும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழ்நாடு விவசாய சங்கம் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தது ஆனால் தமிழக அரசு தென்னை விவசாயம் நலம் கருதி கள்ளுக்கடை திறக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை கள் இறக்க நீதிமன்ற அனுமதி உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வில்லை ஆகையால் உடனடியாக தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளுக்கு உண்டான தடையை நீக்கி தமிழக முழுவதும் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் அரசு ஏற்று நடத்தும் மதுக்கடைகளை மூட வேண்டும் மூடவில்லை என்றால் மது கடைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைத்து தடை விதிப்போம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கள் இறக்கும் போராட்டத்தில் தலைவர் வேலுசாமி உட்பட ஏராளமான விவசாயிகள் தலையில் சட்டியை வைத்து கொண்டு ஆர்பாட்டம் செய்தனர் பிறகு தென்னை மரத்தின் கள் இறக்க மண் சட்டிகளை வைத்தனர் . விரைவில் கல்லுக்கான தடையை நீக்காவிட்டால் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
சங்க மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் ராஜேஷ், நாமக்கல் மாவட்ட தலைவர் பொன்னுசாமி, வேலூர் மண்டல செயலாளர் வெங்கடபதிரெட்டி, மதுரை மண்டல செயலாளர் ராஜேந்திரன், சேலம் மண்டல தலைவர் வேல்முருகன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்