கம்பம் நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டத்தில் வயநாடு பேரிடரில் உயிரிழந்த வர்களுக்கு மௌன அஞ்சலி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர்மன்ற மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்
கூட்டம் துவங்கியதும் முன்னதாக நமது அண்டை மாநிலமான கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் விலைமதிப்பற்ற எத்தனையோ மனித உயிர் பறிபோனது இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
இதை அடுத்து நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் நகரின் அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
இந்த இந்த கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற முப்பத்தி மூணு வார்டு உறுப்பினர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் மேலும் நகர மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனுக்குடன் பதில் அளித்தனர். நகராட்சி பொறியாளர் அய்யனார் நன்றி கூறினார்