மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மடிப்பு நோக்கி தயாரிப்பு பயிற்சி பட்டறை தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஈடன் அறிவியல் மைய இயக்குனர் பாண்டியராஜன் மற்றும் சிட்டம்பட்டி ஆசிரியர் சிவராமன் ஆகியோர் மடிப்பு நோக்கி தயாரிக்கும் முறையை விளக்கினர்.
அனைத்து மாணவர்களும் மடிப்பு நோக்கியை முறைப்படி தயார் செய்தனர். மடிப்பு நோக்கி மூலம் எறும்பு, இலை, மண், பேன் போன்ற சிறிய உயிரினங்கள் பார்வையிடப்பட்டன. மடிப்பு நோக்கியை பயன்படுத்தும் முறை, அதை செல்போனுடன் இணைத்து பார்வையிடும் முறை குறித்து விளக்கப் பட்டது.
மாணவர்களுக்கும் இலவசமாக மடிப்பு நோக்கி வழங்கப் பட்டது. முஹம்மது இத்ரீஸ், பைரோஸ் பானு ஆகிய மாணவ, மாணவிகள் மடிப்பு நோக்கி குறித்த தங்களது அனுபவங்களை எடுத்துரைத்தனர். ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார். நிகழ்வில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.