பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் ரூ 1 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறை புதிய பள்ளி கட்டிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார் ..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டம் 2022 2023 மதிப்பீடு ரூ1 கோடியே 24 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 8 வகுப்பறை புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது
விழாவிற்கு மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் நாசர் பாபநாசம் பேரூர் திமுக செயலாளர் கபிலன் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் வரவேற்றுப் பேசினார்
விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய 8 வகுப்பறை கட்டிடத்தினை திறந்து வைத்தார் பின்னர் பள்ளி வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் கலந்துரையாடினார்
விழாவில் தஞ்சாவூர் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் செயற்பொறியாளர் செல்வராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், குமார் உதவி செயற்பொறியாளர் எஸ். செல்வராஜ் உதவி பொறியாளர் சரவணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், தேன்மொழி, வட்டார கல்வி அலுவலர்கள் வேல்முருகன் ரோஸ்லின் பிருந்தா முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குலின் விர்கோ மேரி பள்ளி மேலாண்மை குழு தலைவி மஞ்சுளா தேவி ஆசிரியர் பயிற்றுனர் மகேஸ்வரி ஒப்பந்தக்காரர் மணிவண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்