கோவையில் சமூக ஆர்வலர் கே.கே.கோபால் சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு லயன்ஸ் கிளப் சார்பில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
கோவை சேரன் மாநகரை அடுத்த விஸ்வேஷ்வரா நகர் பகுதியில் உள்ள பார்கில்,சிம்டெக் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான கே.கே. கோபால்சாமியின் 61வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கை கவசம் ,கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவி களுக்கு எழுதுகோல், இனிப்புகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 324c , மற்றும் லயன்ஸ் கிளப் டைட்டில் சிட்டி , தர்ம சாஸ்தா பள்ளி மாணவர்கள் ,அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 324c தலைவர் பிரசாந்தி, செயலாளர் ஹர்சனா, பொருளாளர் விஷ்மிதா, சர்வீஸ் ஷேர்பிரசன் அஸ்வதி, மற்றும் திவ்யா ,அகிலாண்டேஸ்வரி ,மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் டைட்டில் சிட்டி தலைவர் தினேஷ் குமார் ,செயலாளர் செந்தில்குமார், மதன் மோகன், பொருளாளர் வீரராகவன், ரீஜியன் ஷேர்ப்ரசன் பாலமுருகன், பட்டய தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.