செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டுள்ள பகிர்ந்து என்னும் விலையில்லா உணவகம் மூலம் தினமும் ஆதரவற்றோர் உள்ளிட்ட 100 நபருக்கு உணவளித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து நேற்று 100 ஆவது நாளை எட்டிய நிலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாம்பட்டு லட்சுமணன் ஸ்வாமிகள், திவ்யா ஆப்டிகல்ஸ் ஏ.ஜெ.ரூபன், இந்தியன் பிராய்லர் அமானுல்லா, பல்மருத்துவர் மணி அரசு ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இலவச உணவகம் ஏற்பாடு செய்து 100 வது நாளை தொடும் தொண்டு நிறுவனத்தை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.