தூத்துக்குடியில் பிரபல தொழிலதிபர் வில்சன்ஸ் குழுமங்களின் தலைவர், ஜோ வில்லவராயர் காலமானார். அவருக்கு வயது 73.
தூத்துக்குடி வில்சன்ஸ் குழுமங்களின் தலைவர், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநனர் முன்னாள் தூத்துக்குடி துறைமுகசபை உறுப்பினர் துறைமுக உபயோகிப்பாளர்களின் நல் வழிகாட்டியும் பொன்னுசாமி வில்லவராயர் புதல்வருமான ஜே.பி. ஜோ வில்லவராயர் (வெள்ளிக்கிழமை) இரவு இயற்கை எய்தினார்,
நல்லடக்க திருப்பலி 11.08.2024 (ஞாயிற்றுக்கிழமை ) காலை 9.00 மணி அளவில் சிதம்பரநகரில் உள்ள புனித சார்லஸ் ஆலயத்தில் வைத்து நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அன்னாரது மறைவுக்கு குடும்பத்தினர்கள் மற்றும் தூத்துக்குடி, சென்னை, கொச்சின் வில்சன்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.