விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே உள்ள அபு ஹாலில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பின் பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் எஸ். பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலாளர் க. வேலாண்டி வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் எஸ். ஹரிகுமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் குறைகள் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துதல் குறித்தும், இடமாறுதல் குறித்தும், பெண் பணியாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முடிவில் நிர்வாகத்திற்கு உரிய முறையில் விளக்கமான அறிக்கையை தயாரித்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் கருப்புசாமி நன்றி கூறினார். ஏராளமான கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர்.