சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தேர்வில் புதிய தலைவராக சி.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவராக, கு.துர்காதேவி மற்றும் 21 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைமையாசிரியர் டி.ஆர். நம்பெருமாள் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு பார்வையாளராக தெள்ளார் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவுஸ் கலந்து கொண்டார். மேலும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பாலாஜி முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு தேர்வு சிறப்பாக நடத்தப்பட்டு உறுதிமொழியை எடுத்துக் கொள்ளப்பட்டது. இறுதியில் கல்வியாளர் பொன். சந்திரசேகரன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.