தேனி மாவட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் வரும் 15 8 2024 அன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணி கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது
130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையிலும் கிராம சபை கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது
மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் சாலை சாக்கடைக்கால்வாய் போன்ற வசதிகள் குறித்து பொதுமக்கள் ஆர்வத்துடன் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்