செல்லம்பட்டி அருகே புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம் : நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடு சேதம் ஆனதாக குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பழமையான புளியமரம் உள்ள நிலையில் அது சேதமாகி முறிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை மனு அளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் செல்லம்பட்டி காரிமங்கலம் சாலையில் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரது மகன் முத்துராஜ் 45, சண்முகம் என்பவரது மகன் குமரேசன் 43, சண்முகம் என்பது மகன் மணிகண்டன் 34 ஆகியோரது வீடுகளின் மீது நேற்று இரவு திடீரென புளியமரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தார்கள் உயிர் தப்பிய நிலையில் தற்போது வீட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் தெருவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக சேதமடைந்த குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பலமுறை நெடுஞ்சாலை துறையினருக்கு மனு அளித்தும் இந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட நிலையில் சாலைக்கு இடையூறாக இருந்த கிளைகள் மட்டுமே வெட்டப்பட்டதாகவும் மரத்தை அப்புறப்படுத்தாமல் சென்றது இந்த விபத்திற்கு காரணம் என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து காவேரிப்பட்டிணம் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது எங்களது சாலை ஆய்வாளரை அனுப்பி உள்ளோம் மரத்தை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை ஆர்டிஓவிடம் சொல்லி இருக்கிறோம் என்று தகவல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *