கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் சுகாதாரப் பணிகள் குறித்த ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகரம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரமாகும் இந்த நகரின் அருகே நமது அண்டை மாநிலமான கேரளா குமுளி 20 கிலோமீட்டர் தூரத்திலும் கம்பம் மெட்டு 15 கிலோமீட்டர் தூரத்திலும் தமிழகம் கேரளாவை இணைக்கிறது கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் நகரில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

இதனால் திடீரென மழைப்பொழிவும் சிறிது நேரத்தில் வெயில் அடிப்பதும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது பொது மக்களுக்கு சுகாதாரம் இருந்தால் தான் இது போன்ற காலகட்டங்களில் நோய் இல்லாமல் வாழ முடியும் எனவே வரும் முன் காப்போம் என்பது போல நகராட்சி பகுதிகளில்நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் தலைமையில் சுகாதார அலுவலர் அரசகுமார் முன்னிலையில் நகரில் உள்ள 33 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் நேரடியாக சென்று சுகாதாரப் பணிகள் ஆன சாக்கடை சுத்தம் செய்தல் கொசு மருந்து அடித்தல் வீடுகளில் உள்ள பாத்திரங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதை அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு உத்தரவிட்டனர் மேலும் வீடுகளில் நேரடியாக பொதுமக்களை சந்தித்து அங்கு சேகாரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்குவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் சுகாதார பணியாளர்கள் தினசரி தெருக்களில் குப்பைகள் தேங்காதவாறு குப்பைகளை வாங்கிச் செல்ல தூய்மை பணியாளர்களை அறிவுறுத்தினார் இதை அடுத்து கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து அங்கு வந்து உணவு அருந்தும் பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டு அதன்படி உணவு சுகாதாரமாக தரமான முறையில் வழங்க வேண்டும் என அம்மா உணவக பணியாளர்களுக்கு உத்தரவிட்டார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் அய்யனார் நகராட்சி மேலாளர் ஜெயந்தி கணக்காளர் குமார் அக்கவுண்டன்ட் மெர்சி சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல் பால்பாண்டி உள்பட சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலர்கள் நகரமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *