பாரத திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ல் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பாக தேசிய கொடியுடன் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
காரமடையில் துவங்கிய பேரணி டீச்சர்ஸ் காலனி, குட்டையூர் வழியாகசென்று மேட்டுப்பாளையம் ஐயப்பன் திருக்கோவில் அருகே முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட துணைத்தலைவர் விக்னேஷ், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார். இளைஞரணி மாவட்ட மாவட்ட நிர்வாகிகள் விக்னேஸ்வரன், கிஷோர்,ஈசன் ரித்திஷ், காளிமுத்து மற்றும் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் பாலு, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில் செங்கோடன்,
தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு மாவட்ட தலைவர் மதன்,உட்பட இளைஞர் அணியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.