தேனி நகரில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் தடுக்க கோரிக்கை தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தேனி பெரியகுளம் சாலையில் பொம்மைய கவுண்டன்பட்டி முதல் ரத்தினம் நகர் அன்னஞ்சி விலக்கு பைபாஸ் வரையிலான மாநில நெடுஞ்சாலையில் ஓவிய மின்விளக்கு இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்றி கும்மிருட்டாக உள்ளதை பயன்படுத்தி தேனி அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள பிராய்லர் கோழி கடை விற்பனையாளர்கள் கடையில் சேகரமாகும் இறைச்சி கழிவு மற்றும் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த சாலையின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் செல்கின்றனர் மேலும் இந்த துர்நாற்றத்தால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது மேலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு இப்படி கொட்டப்படும் கழிவுகள் மாநில நெடுஞ்சாலையில் சிதறி கிடக்கிறது எனவே ரோட்டோரம் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து அப்பகுதியில் சிதறி கிடக்கும் இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.