கருணாநிதி நினைவு தினம் 105 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீடு-
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்
கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கான விபத்து காப்பீட்டினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வழங்கினார்.
ஆலங்குளம் நகர திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் திமுகவினருக்கு ஒரு வருடத்தி;ற்கான ரூ.5 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி ஆலங்குளத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூர் திமுக செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் எம்.திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, 105 ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் கட்சியினருக்கு விபத்து காப்பீடு வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மகளிரணி சரஸ்வதி பாஸ்கர், ஆலங்குளம் நிர்வாகிகள் கந்தன்ராஜ், பொன்னுத்துரை, ராஜையா, அல்போன்ஸ், சேர்மராஜா, மனுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.