ஆலங்குளத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட த.மா.கா.தலைவர் என்.டி.எஸ்.சார்லஸ் துவக்கி வைத்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக என்.டி.எஸ்.சார்லஸை, கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்துள்ளார். இதையடுத்து புதிய மாவட்டத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட என்.டி.எஸ்.சார்லஸ் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து த.மா.கா நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, கட்சி உறுப்பினர் சேர்க்கை பணியினை என்.டி.எஸ். சார்லஸ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தென்காசி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றவுடன், முதலில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு எனது கட்சி பணியை தொடங்கியுள்ளேன்

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி சட்டமன்ற தொகுதியில் த.மா.காவின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், உறுப்பினர் சேர்க்கையை இன்று தொடங்கியுள்ளோம். தொடர்ந்து இந்த பணி குக்கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் நடைபெறும். கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபடுவதுடன், மக்கள் பயன்பெறும் வகையில் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட த.மா.கா. துணைத் தலைவர் காசி பெருமாள், நகர தலைவர் தாமஸ், நிர்வாகிகள் வெங்கடேஷ்வரபுரம் விஜயராம், மகேந்திரன், வழக்கறிஞர் மகேஷ். குறிப்பன் குளம் தங்கப்பா, சௌந்தர், செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சமுத்திரபாண்டி, ராஜ், மகளிர் அணி தெய்வக்கனி, ராஜா, கார்த்திக், அருள்ராஜ், மாஸ்டர் ராஜா, சாதிக், ராமகிருஷ்ணன், ராமர், கணேசன், முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *