வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி-திருச்சி ஆசாமி – தென்காசியில் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இடங்களில் பண மோசடி செய்த திருச்சியை சேர்ந்த நபரை தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்
தென்காசியை சேர்ந்த
சாகுல்ஹமீது என்பவரிடம் திருச்சியை சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் செய்யது ஹரீம் மைனுதீன் (வயது 40) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த
ஆண்டு ரூ.90 ஆயிரம் வாங்கியதுடன் வெளிநாட்டிற்கு அனுப்பாமலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார், செய்யது ஹரீம் மைனுதீன் ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது சென்னை பாலவாக்கம் பகுதியில் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாகுல் ஹமீது தென்காசி சைபர் க்ரைம் போலீசில் செய்யது ஹரீம் மைனுதீன் மீது புகார் செய்தார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வசந்தி, உதவி ஆய்வாளர் செண்பகப்பிரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் அடங்கிய குழுவினர் பண மோசடி செய்த செய்யது ஹரீம் மைனுதீனை
கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் செய்யது ஹரீம் மைனுதீன் கிருஷ்ணகிரி யைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் ரூ.2.5 லட்சம், வேலூர், இராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த
14 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து செய்யது ஹரீம் மைனுதீனை தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதன்படி செய்யது ஹரீம் மைனுதின் சிறையில் அடைக்கப்பட்டார்.